நீலகிரி மாவட்டம், உதகை வட்டாட்சியர் அலுவலகத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் 24 பயனாளிகளுக்கு ரூபாய் 19. 45 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார் தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.பா அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் புதிய குடும்ப அட்டைகள் 3 பேருக்கு ரூ 1.20 லட்சம் இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை 10 பேருக்கு ரூ.14.50 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வங்கி கடன் உதவிகளை வழங்கினார்கள். ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு டயாலிசிஸ் பிரிவு ரத்தமையம் வார்டுகளை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக