இந்த செயற்குழு மற்றும் பொது குழு கூட்டம் தூத்துக்குடி DSF கிராண்ட் பிளாசா அரங்கில் வைத்து இன்று 19.11.2026 மாலை 6 மணி முதல் நடைபெற்றது.
இந்த FACEAT&P மண்டலம் 10 செயற்குழு கூட்டத்திற்கு இன்ஜினியர் முத்துகுமாரசாமி தலைமை தாங்கினார், செயலாளர் இன்ஜினியர் தில்லை நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் இன்ஜினியர் முத்து முருகன், இன்ஜினியர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனை தொடர்ந்து முத்து நகர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் இன்ஜினியர் சந்தானம், செயலாளர் இன்ஜினியர் செல்வகுமார், பொருளாளர் இன்ஜினியர் கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில் 2வது பொது குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சங்கத்தினை பதிவு செய்த சான்றிதழை FACEAT&P 10இன் மண்டல பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் ஸ்ட்ரக்டுரல் இன்ஜினியர் திருநெல்வேலி சரவணன் கட்டுமான ETHICS குறித்து பேசினார். நிகழ்ச்சியினை மதுரை பிரபல ஸ்டோன் ஜோன் நிர்வாக இயக்குநர் அக்ஷய் குமார் ஜெயின், புரொபஷனல் எலிவேட்டர்ஸ் மற்றும் தூத்துக்குடி பிரம்மா சங்கர் ஏஜென்சி ஆகியோருடன் இணைந்து முத்து நகர் சிவில் இன்ஜினியர்ஸ் சங்கத்தினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட DTCP மாநில ஒருங்கிணைப்பாளர் இன்ஜினியர் இசக்கியப்பன், சங்க முன்னாள் தலைவர் ஹென்றி டேனியல் உட்பட வந்திருந்த பல்வேறு நிர்வாகிகளுக்கும், மூத்த பொறியாளர்களுக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர்.
இதனை இன்ஜினியர் குமரேசன் தொகுத்து வழங்கினார். உடன் உடனடி முன்னாள் தலைவர் இன்ஜினியர் ஜான்சன், இன்ஜினியர் உஸ்மான், சங்க துணை தலைவர் இன்ஜினியர் தேவராஜ், துணை செயலாளர் இன்ஜினியர் மகாலிங்கம், செயற்குழு உறுப்பினர்கள் இன்ஜினியர் முருகன், இன்ஜினியர் சரவணன், இன்ஜினியர் ஜெயராம், நிர்வாக குழு மூத்த இன்ஜினியர் சரவணன், இன்ஜினியர் செந்தில் ஆறுமுகம், இன்ஜினியர் தங்கவேல் மற்றும் இன்ஜினியர் மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக