கடலூர், வரகால்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறை உற்றுநோக்கல் திட்டத்தின் கீழ் வகுப்பறையில் மாணவர்களின் கற்றல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கட்டப்பட்டு வரும் அஞ்சலை அம்மாள் அறிவுலக நூலக கட்டுமானப் பணிகளையும்
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து,
ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில்வதற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும், பள்ளிகளின் சுற்றுசூழலை மேம்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில், வகுப்பறை உற்றுநோக்கல் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது மற்றும் தினசரி வீட்டுப்பாடம் வழங்குவது, பாடம் வாரியாக மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்களின் மொழி பாடங்களில் வாசிப்பு முறை, மாணவர்களின் தினசரி வருகைபதிவேடுகள். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, வரகால்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் மாணவர்களுக்கு நடைபெற்ற கணித வகுப்பில் ஆசிரியர் மாணவர்களுக்கு கற்பித்தல் முறை குறித்தும், மாணவர்கள் வகுப்பில் பராமரிக்கப்படும் நோட்டு புத்தகங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மாணவர்களிடம் ஆங்கிலம் மற்றும் தமிழ் உச்சரிப்பு மற்றும் வாசிப்பு திறன் குறித்தும், மாணவர்கள் தினசரி வருகைப்பதிவேடுகளையும் ஆய்வு செய்யப்பட்டது. ஆசிரியர்கள் கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கற்றல் திறனை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கவும், வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் கற்றல் திறனை அவ்வவபோது பரிசோதித்து அதற்கேற்றாற்போல் வகுப்புகளை எடுக்க வேண்டும். இதனை துறை சார்ந்த அலுவலர்கள் அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, செம்மண்டலம் குண்டுசாலை பகுதியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.98.26 கோடி மதிப்பீட்டில் அஞ்சலையம்மாள் அறிவுலக நூலக கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்யப்பட்டது. இந்நுலகம் தரைதளம் உட்பட 4 தளங்களுடன் அனைத்து அடிப்படை அம்சங்களுடன் கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கடிடத்திற்கு பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கட்டுமானப் பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் மேற்கொண்டு, குறிப்பிட்ட காலகெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் மகாலட்சுமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கொளதமன், மாவட்ட நூலக அலுவலர் முருகன், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கடலூர் செய்தியாளர்
D.தனுஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக