திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் கிளை நூலகம் சார்பில், சி.ம.புதூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 59-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு முப்பெரும் நிகழ்வு நடைபெற்றது.
இதில்,
1. பேச்சுப்போட்டி – எனக்குப் பிடித்த புத்தகம்.
2. ஓவியப்போட்டி.
3. கவிதைப்போட்டி.
என மூன்று வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் க. சங்கர் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் இரா. ஜெயப்பிரியா அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை அ. தென்னரசி, இளநிலை உதவியாளர் சையத் சலீம் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.ம.புதூர் கிளை நூலகர் ஜா. தமீம் சிறப்புரையாற்றி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்புப் பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் வாழ்க்கையில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்றால் வாசிப்பை நேசிக்க வேண்டும். புத்தக வாசிப்பு அறிவையும் சிந்தனைத் திறனையும் வளர்க்கும் என்று எடுத்துரைத்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குச் சிறப்புப் பரிசுகளும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவாக மாணவிகள் நன்றி கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக