வாலாஜாவில் இலவச யோகா மற்றும் இயற்கை மருத்துவ முகாம் !
இலவச யோகா மற்றும் இயற்கை மருத் துவ முகாம் அகில இந்திய மக்கள் சட்ட உரிமை பாதுகாப்புக் கழகம் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோ பதித் துறை இணைந்து நடத்திய இலவச யோகா மற்றும் இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது. ராணிப் பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய மக்கள்சட்ட உரிமை பாதுகாப்புக்
கழகம் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இணைந்து நடத்திய இலவச யோகா மற்றும் இயற் கை மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ் நாடு ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.சத்தியவேல்குமார் தலைமை தாங்கினார். மாவட்டக்கழகச் செயலாளர் கே.விநாயகம் முன்னிலை வகித்தார்.முகாமை மாநிலச் செயலாளர் ஜி.ஆர்.கோபி
தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக குளோப் டைல்ஸ் உரிமையாளர்
அக்பர் ஷரீஃப் இயற்கை மருத்துவ மருத்துவர் சசிரேகா, மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், திருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளர் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.முகாமில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சிகள், இயற்கை மருத்துவத் தின் அடிப்படைகள் மற்றும் உடல் நலத்தைப் பேணுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் உடல், மன நலத்தை மேம்படுத்த உதவுகின்றன. இயற்கை மருத்துவம் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறைமாற்றம், உடற்பயிற்சி உள்ளிட்ட வழிமுறைகளுக்கு முக்கியத்து வம் அளிக்கிறது. ஹோமியோபதி மருத் துவம் தனித்துவ-மான மருத்துவ முறையாகும். இம்மருத்துவ முறைகளைப் பயன்படு த்தும்போது தகுதியான
மருத்து வர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்
தப்பட்டது. அகில இந்திய மக்கள் சட்ட உரிமை பாதுகாப்புக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அடிப் படை உரிமைகளைப் பாதுகாத்தல், சமூக நலன்மற்றும் பொதுமக்களின்
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விழிப் புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்து ரைக்கப்பட்டது.இந்கழ்ச்சியில் வாலாஜா
ஒன்றியச் செயலாளர் பாலாஜி, வாலாஜா ஒன்றிய ஊடகப் பிரிவு செயலாளர் சுரேஷ், மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர் ராஜேஷ், மாவட்ட மனித உரிமை நலத்துறைச் செயலாளர் ஹரிகரன், வாலாஜாநகர ஊடகப் பிரிவு செயலாளர் விக்னேஷ், ஐசக், சமூக ஆர்வலர் குமரன் ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.இறுதியில் தலைமை நிலையச் செயலாளர் அலி அகமது நன்றி கூறினார். முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக