கே.வி.குப்பம் பிடிஓ அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 நவம்பர், 2026

கே.வி.குப்பம் பிடிஓ அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு!

கே.வி.குப்பம் பிடிஓ அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு!
கே.வி.குப்பம், நவம்பர் 26 -
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்திய அரச மைப்பு தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலு வலர் தாட்சாயிணிதலைமை தாங்கினார் 
இதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத் தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்து வம் ஆகிய அடிப்படை விழுமியங்களைப் போற்றிப் பாதுகாப்பதுடன், ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படு வோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசப் பட்டது.முன்னதாக அலுவலகவளாகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உரு வாக்கிய டாக்டர் அம்பேத்கரின் திருவுரு வப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இதில் மேலாளர் விஸ்வநாதன் மற்றும் அலுவ லக ஊழியர்கள், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் இளைஞர் எழுச்சிப் பாச றை மாவட்டச் செயலாளர் அனிஷ்குமார், கலை இலக்கியப் பிரிவு மாவட்டச் செய லாளர் ராஜ்குமார், பஞ்சமி நில மீட்பு மாவட்ட அமைப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad