திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சி. ம. புதூர் கிளை நூலகத்தில் சித்த மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் வாசகர் வட்ட தலைவர் பொன். சந்திரசேகரன் தலைமை வகித்தார். நல்நூலகர் ஜா. தமீம் அனைவரையும் வரவேற்றார். நூலகப் புரவலர்கள் அ. சுப்பிரமணியன், அ. குலாப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு உரை ஆற்றிய குண்ணகம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் சா. சந்தோஷ்குமார் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது சித்த மருத்துவம் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் நாம் உண்ணும் உணவே மருந்து என கூறினார். மழைக்காலங்களில் பல்வேறு நோய்கள் பரவும் இவற்றை கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் எனவும் சத்தான உணவுகள் பழங்கள், கீரைகள் உண்ண வேண்டும் எனக் கூறினார். இந்த நிகழ்வில் நூலக வாசகர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது இறுதியாக ஆசிரியை தா. பாரதி நன்றி கூறினார்.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக