ராணிப்பேட்டை , நவம்பர் 18 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சீதா ராமன் தெருவில் எழுந்தருளி அருள் பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மகா கந்த சஷ்டி விழா விமர்சையாக நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினந் தோறும் ஸ்ரீ முருகப்பெருமான் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஐந்தாம் நாள் சூர னை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்ச்சி யும் ஆறாம் நாள் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆற்காடு 13வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கண்மணி ஹரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்கள். இதில் முருகப்பெருமான் பக்தி பாடல் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து சீர்வரிசை எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகு விமர் சையாக நடைபெற்றது. இதில் லலிதா சகஸ்ரநாம குழுவினர்கள் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் என ஏராளமா னோர் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என கோஷம் எழுப்பி வணங்கி முருகப்பெருமான் அருள் பெற்று சென்ற னர். இறுதியில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக