16 கால் மண்டபம் அருகே திரண்ட இந்து முன்னணி நிர்வாகிகள், முருக பக்தர்கள் – கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள்!
மதுரை:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் முருக பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும், ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் 16 கால் மண்டபம் பகுதியில் பரபரப்பு நிலவியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக