கண் தானம், உடல் தானம், ஆதரவற்ற வரின் உடல் நல்லடக்கம் – சமூக சேவகர் ரொட்டேரியன் எம். கோபிநாத் நெகிழ்ச்சி செயல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 நவம்பர், 2026

கண் தானம், உடல் தானம், ஆதரவற்ற வரின் உடல் நல்லடக்கம் – சமூக சேவகர் ரொட்டேரியன் எம். கோபிநாத் நெகிழ்ச்சி செயல் !

 கண் தானம், உடல் தானம், ஆதரவற்ற வரின் உடல் நல்லடக்கம் – சமூக சேவகர் ரொட்டேரியன் எம். கோபிநாத் நெகிழ்ச்சி செயல் !
குடியாத்தம், நவம்பர்  26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் கண் தானம், உடல் தானம் மற்றும் ஆதர வற்றவரின் உடலை நல்லடக்கம் என மூன்று மனிதநேயப் பணிகளை மேற் கொண்டு சமூக சேவகர் ரொட்டேரியன் எம். கோபிநாத் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பாராட்டையும் பெற்றுள்ளார்.கண் தானம் (சுமார் 85) வயது மதிக்கத்தக்க செய்யாறு பகுதியை சார்ந்த தனலட்சுமி அம்மையார் வியாழக் கிழமை அதிகாலை 5 மணிக்கு இயற்கை எய்தினார். அவரது விருப்பத்தின் பேரி லும், குடும்பத்தினரின் வேண்டு கோளின் படியும் அவரது கண்கள் தானமாகப் பெற ப்பட்டு, காலை 11 மணியளவில் வேலூ ரில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.
      உடல் தானம் தொடர்ந்து, தனலட்சுமி அம்மையாரின் முழு உடலும் தானமாகப் பெறப்பட்டு, மாலை 4.30 மணியளவில் ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்து வமனை மருத்துவக் கல்லூரிக்கு மருத்து வக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பயன் பாட்டிற்காக வழங்கப்பட்டது. ஆதரவற்ற வரின் உடல் நல்லடக்கம் கடந்த நவம்பர்  10-ஆம் தேதி குடியாத்தம் பழைய பேரு ந்து நிலையம் அருகே சுமார் (45 வயது) மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை மீட்ட குடியாத்தம் நகர காவல் துறையினர குடியாத்தம் அரசு மருத்து வமனையில் உள்ள பிரேதக் கிடங்கில் வைத்தனர். அவரது விவரங்கள் குறித்து விளம்பரம் செய்யப்பட்டும் உறவினர்கள் யாரும் அடையாளம் காண முன்வரவில் லை.
இதையடுத்து, அந்த உடலை சமூக சேவ கர் ரொட்டேரியன் எம். கோபிநாத் பெற் றுக்கொண்டு, குடியாத்தம் சுண்ணாம் பேட்டை இடுகாட்டில் நகராட்சி விதிமுறை களைப் பின்பற்றி, தனது சொந்தச் செல வில் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்தார்.ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில், மூன்று விதமான மனித நேயப் பணிகளை மேற்கொண்ட எம். கோபிநாத்தின் சேவைப் பணி பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad