குடியாத்தம், நவம்பர் 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி காப்புக்காடு பகுதியில் கள்ள நாட்டு துப்பாக்கியை பயன் படுத்தி வேட்டையாட முயன்றவர்களில் ஒருவர் கைது இருவர் தப்பி ஓட்டம். குடியாத்தம் வனச்சரகர் பிரதீப் குமார். வனவர் சதீஷ் குமார், வனக்காப்பாளர் வனராஜுலு, வனக்காவலர்கள் பிரபு, மற்றும் அசோக் குமார், ஆகியோர் பரதராமி காப்புக்காடு பெரிய கணவாய் பகுதியில் குழுவாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கள்ள நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வேட்டையாட முயன்று கொண்டிருந்த மூன்று நபர்களை கண்ட தும் சுற்றிவளைத்தனர். அதில் மத்தேட்டப் பல்லி கிராமத்தைச் சேர்ந்த கங்காதரன் மகன் வெங்கடேசன்(வயது 25 ) பிடி பட் டார். மற்ற இருவருமான கொத்தூர் கிராமம் துரை சாமி மகன்கள் பாபு (வயது 36) குமார் (வயது 34) இருவரும் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட வெங்கடேசன் இடமிரு ந்து ஒரு நாட்டு துப்பாக்கி இரண்டு கத் திகள், மற்றும் ஒரு கட்டிங் பிளேயர் பறி முதல் செய்யப் பட்டன. மேற்கொண்டு வனத்துறையினர் கள்ள நாட்டு துப்பாக்கி யை பயன்படுத்தி காட்டில்வேட்டையாடும் போது பிடிபட்ட வெங்கடேசனின் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத் தனர். தப்பி ஓடிய இருவரை பற்றி விசாரி த்து வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக