சாலை விபத்து வழக்கில் பிக்கப் வாகன ஓட்டுநருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 25 நவம்பர், 2026

சாலை விபத்து வழக்கில் பிக்கப் வாகன ஓட்டுநருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு.


கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சாலை விபத்து வழக்கில், பிக்கப் வாகன ஓட்டுனருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் (CJM) நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, கள்ளடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், தனது பிக்கப் வாகனத்தில் ரவினேஷ் மற்றும் அவரது அண்ணன் ஐயம்பெருமாள் உள்ளிட்ட தொழிலாளர்களுடன் மார்பிள் கற்களை ஏற்றிக்கொண்டு விநியோகம் செய்வதற்காகச் சென்றுள்ளார். அப்போது ராஜ்குமார் வாகனத்தை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதால், வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த மார்பிள் கற்கள் ஐயம்பெருமாள் மீது விழுந்து அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக 
அனுமதிக்கப்பட்டு பின்னர் இறந்து போனார். 

இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடலூர் தனுஷ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad