மாவீரன் பொல்லான் பேரவை மற்றும் அருந்ததியர் இளைஞர் பேரவை சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 31 மே, 2022

மாவீரன் பொல்லான் பேரவை மற்றும் அருந்ததியர் இளைஞர் பேரவை சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஒன்றியம், கொத்தமங்கலம் கிராமம் அரசம்பாளையம் அருந்ததியர் மக்கள் 500 குடும்பங்கள் பயன்படுத்திவந்த பொது இடத்தை 1.5 ஏக்கர் பொது இடத்தை ஊராட்சி மன்றத்தின் மூலம் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்ற முயற்சி செய்து அந்த இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகளை கொட்டி ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள். நூறாண்டுகளுக்கு மேல் மதுரை வீரன் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள இடத்தில் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெற்று வந்தது.


மேலும் குழந்தைகள் விளையாடும் இடமாகவும் இருந்தது காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள 1.5 ஏக்கர் நிலத்தில் குப்பை கொட்டும் இடமாக மாற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் மீண்டும்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கவேண்டுமென  அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் தலைமையில் ஊர் பொதுமக்கள்   நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.


இந்நிகழ்வில் தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் பொன்.சுந்தரம், மாவீரன் பொல்லான் பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், துணைத்தலைவர் கண்ணையன், அரசம்பாளையம் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/