13ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 ஜூன், 2022

13ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்.

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.


தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகில் நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டுக் குழு தலைவர் என் டி.ராமசாமி தலைமையில் நடந்தது, கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சிவ. தியாகராஜன், பீட்டர் சேகர், மற்றும் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, நியாய விலை கடை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் தங்க பூமி, மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் மலையாளம், முத்து, பிரகாஷ், அந்தோணி, ஆறுமுகம், சுந்தர்ராஜன், ரவி, கண்ணன், மகளிர் அணி சரோஜா, ஜீவிதா, புவனேஸ்வரி, தனலட்சுமி, மாலதி, மேரி, ரேணுகா, வசந்தா, உள்ளிட்ட நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.



தொடர் வேலை நிறுத்தம்



கூட்டத்தில் அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை நியாய விலை கடை பணியாளர் களுக்கு வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில அளவில் வருகிற 13ந்தேதி முதல்  தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/