நீலகிரி மாவட்டம், திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜூன், 2022

நீலகிரி மாவட்டம், திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


நீலகிரி  மாவட்டத்தில்  திமுக அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகம் ஊட்டியில் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவை தலைவர் பில்லன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், விஜயாமணிகண்டன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, பாண்டியராஜ், இளங்கோவன், திராவிடமணி, எக்ஸ்போ செந்தில், ராஜூ, மாநில  சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

மேலும் கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் தொரை, பரமசிவன், நெல்லை கண்ணன், ராஜேந்திரன், சிவானந்தராஜா, பிரேம்குமார், உதயதேவன், சுஜேஷ், நகர செயலாளர்கள்  ராமசாமி, ஜார்ஜ், சேகரன், இளஞ்செழியன் பாபு, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, கருப்பையா, சதக்கத்துல்லா, லாரன்ஸ், காமராஜ், வெங்கடேஷ், ராஜா, மோகன்குமார், சீனி, செல்வம், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், ஜெயகுமாரி, ஆனந்தன், கர்ணன், எல்கில்ரவி, காந்தல் ரவி, தேவராஜ், ஆலன், சின்னவர், செல்வராஜ், மகேஸ்வரன், பவீஷ், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், சதீஷ், நடராஜன், சுந்தரராஜ், முத்து, சுப்ரமணி, சின்னவர், ரமேஷ்குமார், சஞ்சீவ்குமார், காளிதாஸ், கண்டோன்மென்ட் செயலாளர் மார்டின், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமாராஜன், நகராட்சி தலைவர் - துணை தலைவர்கள் வாணீஸ்வரி, பரிமளா, சிவகாமி, நாகராஜ், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் மாதன்(எ)மாயன், சுனிதா, கீர்த்தனா, பேரூராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி, கௌரி, ஜெயகுமாரி, வள்ளி, சித்ராதேவி, ராதா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் விக்னேஷ், மத்தீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


கூட்ட முடிவில் மாவட்ட பொருளாளர் நாசர்அலி நன்றி கூறினார், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானம்:-

கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை – தமிழக அமைச்சரவையில் இணைக்க வேண்டும்.

திராவிட முன்னேற்ற கழக வரலாற்றில் பேரறிஞர் அண்ணா அவர்களை தொடர்ந்து, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா அவர்கள் ஒவ்வொரு கழக தொண்டர்களையும் ஒருங்கிணைத்து இந்த மாபெரும் இயக்கத்தை வளர்த்தி உயர்த்தி பாதுகாத்தார்கள்.


தலைவர் கலைஞர் அவர்களின் தொடராக மாண்புமிகு முதல்வர் – கழக தலைவர் தளபதி அவர்கள் ஓயா உழைப்பின் மூலம் சாதாரண சாமான்ய மக்களின் அன்பை பெற்று இந்தியாவின் “நம்பர் ஒன்” முதல்வராக திகழ்ந்து வருவது ஒவ்வொரு கழக தொண்டர்களுக்கும் பெருமைக்குரியதாகும்.


அதேபோல், கழக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கழக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றது முதல் இளைஞர்களை பெரிதும் கவர்ந்து நம் கழகத்திற்கு உறுதுணையாக இருந்து வருவதோடு, நடந்து முடிந்த பல்வேறு இடை தேர்தல்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற பொது தேர்தல்களிலும் இவரது பிரச்சாரம் நாட்டிலுள்ள இளைஞர்களை தி.மு.க.,வின் பக்கம் ஈர்த்துள்ளது. தனது ஆற்றல்மிக்க திரையுலக புகழும் நம் கழகத்திற்கு வலுசேர்த்துள்ளது.


முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு கழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்கள் உறுதுணையாக இருந்ததுபோல், தம்பி உதயநிதி அவர்களும் கழக தலைவர் தளபதி அவர்களுக்கு செயல்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே, தற்போதைய, அரசியல் சூழ்நிலையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இருப்பது நலமானதாக இருக்கும் என நீலகிரி மாவட்ட கழகம் கருதுகிறது. இதனையே நாட்டு மக்களும் விரும்புகின்றனர்.


ஆகவே, தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழக அமைச்சரவையில் இடம்பெற செய்ய மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களும், கழகத்தின் மூத்த முன்னோடிகளும் கழக வளர்ச்சியின் நலன்கருதி உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட செயற்குழு கூட்டம் கேட்டுக்கொள்கிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/