பொது தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய மாவட்டங்களின் சிறப்பு திட்டங்கள் தேவை - ஜி.கே.மணி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 ஜூன், 2022

பொது தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய மாவட்டங்களின் சிறப்பு திட்டங்கள் தேவை - ஜி.கே.மணி.

12ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். தொடர்ந்து உயர்கல்வி பெற வேண்டுகிறேன். +2 வகுப்பில் தேர்ச்சி 93.7%, பத்தாம் வகுப்பு தேர்ச்சி 90.7%. தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம்.


தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய மாவட்டங்களின் நிலை கவலையளிக்கிறது. இதற்கு சிறப்பு திட்டங்கள் தேவை என கடந்த 15 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் வலியுறுத்தி வருகிறேன். அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் மேம்படுத்த வேண்டும்.


தமிழகத்தில் +வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.உயர் கல்வி பெற வேண்டுகிறேன்.தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய மாவட்டங்களின் நிலை கவலையளிக்கிறது.பின்தங்கிய மாவட்டங்களில் கல்வி மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் தேவை என சட்டமன்றத்தில் 15 ஆண்டுகளாக வலியுறுத்திப் பேசி வருகிறேன்.அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் மேலும் சிறப்பான திட்ட நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தி வருகிறேன்.


தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய மாவட்டங்கள் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி இராணிப்பேட்டை, திண்டுக்கல், திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகியன ஆகும்.


பின்தங்கிய மாவட்டங்கள் கல்வியில் முன்னேற அரசு சிறப்பு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். கல்வியில் முன்னேறினால் தான் தமிழகம் வளர்ச்சி பெறும். தேர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்கள் முன்னேறாமல் தமிழ்நாடு வளர்ச்சி பெற்ற மாநிலமாக கருத முடியாது என பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவ தலைவருமான திரு.ஜி.கே. மணி அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/