5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 செப்டம்பர், 2022

5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.

ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணியை வீழ்த்தியது.


இந்த வெற்றி மூலம் லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அடைந்த தோல்வியை சமன் செய்தது பாகிஸ்தான் அணி. இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா, சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் கணிசமான ரன்கள் கொடுத்ததும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக மாறியது.

முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா ரன்களை அடிக்க தொடங்கியதும் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கேஎல் ராகுலும் தனது பங்கிற்கு கணிசமான ரன்களை எடுத்தார், இந்திய அணி 4.2 ஓவரில் 50 ரன்களை கடந்தது. ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தலா 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் 13 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

ரிஷப் பண்ட் 14 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது, ஹர்திக்கின் விக்கெட் இழப்பு பெரும் கவலையை கொடுத்தது, எனினும் விராட் கோலி 35 பந்துகளில் விராட் கோலி அரைசதம் அடித்ததில் மூலம், தனது சர்வதேச டி20 போட்டியில் அதிக முறை அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார், தொடர்ந்து விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்களுக்கு வெளியேற, தீபக் ஹூடா 16 ரன்களை எடுத்தார், இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.


தொடந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வெற்றி பெற கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் ஆசிப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆர்ஸ்தீப் சிங் தவறவிட்டார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புவனேஸ்வர்குமார் வீசிய 19வது ஓவரில் பாகிஸ்தான் 19 ரன்களை விளாசியது. 


இதனையடுத்து கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆர்ஸ்தீப் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தான் இரு ரன்கள் எடுத்து ஒரு பந்துகள் எஞ்சிய நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/