உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்வு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்வு மற்றும் குறு வட்ட மைய விளையாட்டு  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் 100% தேர்ச்சி பெற்ற 13 ஆசிரிய பெருமக்களுக்கு ரூபாய் ஆயிரம் விதம் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு செல்வம் டேனியல் ராஜ் அவர்களால் வழங்கும் விழா நடைபெற்றது.


இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திருA.J.மணிக்கண்ணன தலைமையில் பள்ளி 276 மிதிவண்டியை வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர்  திருநாவுக்கரசு, முதன்மை கல்வி அலுவலர் திருமதி த. விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் அமுதா, நகரமன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், நகர செயலாளர் டேனியல் ராஜ், சேர்மன் ராஜவேல்,  சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி, ஆத்மா விகாச பிரியா அம்பா, மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வன், ரோட்டரி சங்கத் தலைவர், தெய்வீகன், தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், முன்னாள் நகர செயலாளர்  செல்லையா, நகர மன்ற உறுப்பினர்கள் செல்வகுமாரி ரமேஷ்பாபு,  மனோபாலன், ஜெயந்தி மதியழகன், மாலதி ராமலிங்கம், ஜெயலட்சுமி விஜய் பூபதி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் எம் பி ரவி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் எம் எஸ் முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் சௌ.ராமலிங்கம். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad