திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட அறநிலையத்துறை அதிகாரிகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட அறநிலையத்துறை அதிகாரிகள்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த சோமனபுரம் கிராமத்தில் உள்ளது அறநிலையத்துறைக்கு சொந்தமான வேணுகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் குத்தகை காலம் முடிந்து புதிய குத்தகை விடுவதற்கான அறிவிப்பை தண்டரா மூலம் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு எந்த அறிவிப்பாக இருந்தாலும் தண்டாரா மூலம் தெரிவிக்க கூடாது, எனவும் ஒலிபெருக்கிகள் மூலமே அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த அரசின் விதிகளை மீறி அறநிலையத்துறை அதிகாரிகளே தண்டராம மூலம் பொதுமக்களுக்கு ஏழ செய்தியை தெரிவித்து இருப்பது பொதுமக்களே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக துறையூர் செய்தியாளர் முருகேசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad