தென்காசி, சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக்கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது என்று கூறிய வீடியோ குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வந்தது.
தென்காசி தீண்டாமை சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
தென்காசி பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை சம்பவம் தொடர்பாக பெட்டிக்கடை உரிமையாளர் மகேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரனை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.
சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கு சீல் - மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் நடவடிக்கை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக