விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாதது ஏன்? மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்கும் ரிசர்வ் வங்கி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 அக்டோபர், 2022

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாதது ஏன்? மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்கும் ரிசர்வ் வங்கி


இந்தியாவில் செப்டம்பர் மாதத்திற்கான நுர்வோர் விலை குறியீட்டை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. அதில், இந்தியாவில் செப்டம்பர் மாதம் சில்லரை பணவீக்கம் 7.41 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் விலைவாசி உயர்வு அதிகரித்து வருகிறது.

சில்லறை பணவீக்கம் 2 முதல் 6 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் பணியாகும். 2016-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கட்டமைப்பு சில்லறை பணவீக்கத்தை ரிசர்வ் வங்கி கட்டுக்குள் வைக்கவேண்டும் என தெரிவிக்கிறது. 

அவ்வாறு தொடர்ந்து 3 காலாண்டுகள் (9 மாதங்கள்) பணவீக்கம் கட்டுக்குள் இல்லை என்றால் இது குறித்து உரிய விளக்கத்தை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு தெரிவிக்கவேண்டும்.

அதேவேளை, செப்டம்பர் மாதம் நுகர்வோர் சில்லரை பணவீக்கம் 7.41 சதவிகிதமாக அதிகரித்துள்ள நிலையில் பணவீக்கம் தொடர்ந்து 9-வது மாதமாக சில்லரை பணவீக்கம் ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட பணவீக்க அளவான 6.0 விட அதிகமாக உள்ளது.

இந்நிலையில்,, 2016-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கட்டமைப்பு அடிப்படையில் தொடர்ந்து 9 மாதமாக பணவீக்கம் நிர்ணயிக்கபட்ட அளவை விட 6.0 விட அதிகமாக உள்ளதால் இது குறித்து மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க உள்ளது.

பணவீக்கத்தை நிர்ணயிக்கப்பட்ட 6.0 என்ற அளவுக்குள் கட்டுக்குள் வைக்காததற்கான காரணம், விலைவாசி உயர்வுக்கான காரணம், 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாதது ஏன்? , விலைவாசியை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/