சென்னை: கோயம்பேடு செல்லும் அரசு பஸ்சில் TN 01 AN 2218 கணவருடன் முன் சீட்டில் இருந்த பெண்ணிடம், பின் சீட்டில் அமர்ந்து இருந்த ஒருவர் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து பெண்ணின் கணவர் கேட்க, சில்மிஷம் செய்தவர் தான் ஆவடி சரகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி என கூறியபடி அப்பெண்ணின் கணவரை, பொதுமக்கள் முன்னிலையில். ஆபாச வார்த்தைகளை கூறியபடி அவரை தாக்க முயன்றார்.
இதையடுத்து, தம்பதியரை பஸ்சில் இருந்து பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது. பல பயணிகள் சிலர், போலீஸ் என்று கூறியதால், அவரை ஒன்றும் செய்யாமல், தம்பதியரை மிரட்டி, பாதி வழியில் இறக்கி விட்டனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே இப்படி செயல்படுவது மக்கள் காவல்துறை மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக