சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நடத்தும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு, தமிழக அரசிடம் முன்வைக்கும் மூன்று அம்ச கோரிக்கைகள்.
- ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமனம் போட்டித் தேர்வு என்ற அரசாணை எண் :149- ஐ நீக்கம் செய்ய வேண்டியும்,
- கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தேர்தல் அறிக்கை 177 ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டியும்,
- பணி நியமனத்தின் போது வயதைக் கருத்தில் கொண்டு பழையபடி வயது தளர்வு அளிக்க வேண்டியும்,
இந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் பாஜகவை சேர்ந்த கரு. நாகராஜன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக வேந்தன் பாலசுப்ரமணியம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக