தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கிள்ளிகுளத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக கிராமப்புற வேளாண் பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். கல்லூரி முதல்வர் தேரடிமணி தலைமையில், பேராசிரியர்கள் தாமோதரன் மற்றும் செந்தில்நாதன், இணை பேராசிரியர்கள் சபரிநாதன், சுப்புலட்சுமி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி வேளாண்மை உதவி இயக்குநர் இளஞ்செழியன், வேளாண்மை அலுவலர் கவுசல்யா, துணை வேளாண்மை அலுவலர் காசி ஆகியோரின் ஆலோசனைப்படி வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் திருமலாபுரம் கிராமத்தில் பாரம்பரிய நெல் இரகங்கள் மற்றும் பூச்சி இன் கவர்ச்சி பொறிகள் என்னும் தலைப்பில் கண்காட்சி அமைத்து விவசாயிகளுக்கு அவற்றின் முக்கியத்துவத்தை விளக்கினர்.

இராசயன முறை மூலம் பூச்சிகளை அழிப்பதைக் குறைத்து கொண்டு இயற்கை முறை மூலம் கட்டுப்படுத்த அறிவுறுத்தினர். தொடர்ந்து மாணவிகள் ஐஸ்வர்யா, தீபிகா, திவ்யா, ஹரிப்பிரியா, ஹரிணிஸ்ரீ, ஜெயந்தி, கல்பனா, கனிஷ்கா அங்கு நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கிள்ளிகுளத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக கிராமப்புற வேளாண் பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். கல்லூரி முதல்வர் தேரடிமணி தலைமையில், பேராசிரியர்கள் தாமோதரன் மற்றும் செந்தில்நாதன், இணை பேராசிரியர்கள் சபரிநாதன், சுப்புலட்சுமி ஆகியோரின் வழிகாட்டுதல்படி வேளாண்மை உதவி இயக்குநர் இளஞ்செழியன், வேளாண்மை அலுவலர் கவுசல்யா, துணை வேளாண்மை அலுவலர் காசி ஆகியோரின் ஆலோசனைப்படி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டாரம் திருமல்லாபுரத்தில் உயிர் உரங்கள் மற்றும் இரசாயன உரங்கள் என்னும் தலைப்பில் கண்காட்சி அமைத்து விவசாயிகளுக்கு அதைப்பற்றிய முக்கியத்துவத்தை விளக்கினர்.உயிர் உரங்களின் முக்கியத்துவத்தை துண்டுப்பிரசுரங்கள் மூலம் விளக்கினர்.
தொடர்ந்து மாணவிகள் ஐஸ்வர்யா, தீபிகா, திவ்யா, ஹரிப்பிரியா, ஹரிணிஸ்ரீ, ஜெயந்தி, கல்பனா, கனிஷ்கா அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக