தமிழ்நாடு முதல்வரின் 70வது பிறந்த நாளை சிறப்பிக்க சென்னை பிராட்வேயில் இரத்த தான முகாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 மார்ச், 2023

தமிழ்நாடு முதல்வரின் 70வது பிறந்த நாளை சிறப்பிக்க சென்னை பிராட்வேயில் இரத்த தான முகாம்.


தமிழ்நாடு முதல்வரின் 70வது பிறந்த நாளை ஒட்டி சென்னை பிராட்வே பிடாரியார் கோயில் தெருவில் உள்ள தூய சகாயமாதா ஹாலில் துறை முகம் தொகுதி திமுக இளைஞர் அணி 56வது  வட்ட உறுப்பினர்களால் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.



இரத்த தான முகாமை டாக்டர் மயில்வாகனன் துவக்கி வைத்தார். இரத்த தான முகாமை சென்னை மேயர் பிரியா ஆனந்த் பார்வையிட்டார், சிறப்பாக செயல்பட்ட இளைஞர்களுக்கு மேயர் பிரியா ராஜன் சான்றிதழ் வழங்கினார், இளைஞர் அணியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்  ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்து வருகின்றனர். எதிர் வரும் காலங்களில் இது போன்ற முகாமை இளைஞர்கள்   நடத்தும்போது பல உயிர்களை காப்பாற்ற முடியும்.



- தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் மு. பிரபாவதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/