மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 மார்ச், 2023

மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் போபண்ணா தலைமையில் சென்னை குரலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய அரசு மற்றும் அதானி குழுமத்திற்கு எதிராக நடத்தப்பட்டது. 


சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஹிட்டன்பர்க் என்ற நிறுவனம் அதானி குழுமத்தின் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையின் விளைவாக, அதானி குழுமத்தின் பங்கு 10 லட்சம் கோடி வரை வீழ்ச்சி அடைந்தது, மத்திய அரசின் தலையீடு காரணமாக LIC மற்றும் SBI இவ்விரு பொது நிறுவனங்கள் அதானியின் குழுமத்தில் LIC நிர்வாகம் சுமார் 39500/-கோடி ரூபாயும், SBI வங்கி நிர்வாகம் 19500/-  கோடி ரூபாயும் அதானி குழுமத்தில்  முதலீடு செய்தது.


அதானி குழுமத்தில் LIC மற்றும் SBI நிறுவனங்களின் முதலீட்டு தொகை அனைத்தும் பங்குதாரர்கள் பொதுமக்களின் பணம், இதற்கு மத்திய அரசின் பதில் என்ன? என்று கேள்வி எழுப்பினர், ஏன் இன்று வரை மத்திய அரசு  Joint Parlymentry Commission (பாராளுமன்ற கூட்டு நண்பர்கள் குழு) அமைத்து எந்த விசாரணை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பினர். 


மத்திய அரசு என்பது அதானி என்ற தனிப்பட்ட மனிதனுக்கான அரசு அல்ல மத்தியில் ஆளும் அரசு, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கான அரசு என்று நிரூபிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்


- தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் மு.பிரபாவதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/