செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் முதல்நிலை ஊராட்சியில் பஞ்சாயத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ் ரீநெல்லீஸ்வரர் திருக்கோவிலில் மஹாகும்பாபிஷேகம் கைலாய வாத்தியம் முழங்க மேள தாளங்களோடு ஈசனுக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் அ இ அ தி மு க .செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மற்றும் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தையூர் எஸ்.குமரவேல், நெல்லிக்குப்பம் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவரும், அஇஅதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட திருப்போரூர் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான பாஸ்கர் (எ) பார்த்தசாரதி மற்றும் திருப்போரூர் வடக்கு ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர் தாட்சாயணி தனசேகரன் மற்றும் ஊர் பெரியோர்கள் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பொதுமக்களும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அனைவரும் இறைவன் அருளை பெற்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக