ஆட்சிமொழிச் சட்ட வார விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 மார்ச், 2023

ஆட்சிமொழிச் சட்ட வார விழா.


தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பெறுதல் வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பெற்றுள்ளது. 


அதனடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 23.03.2023 முதல் 30.03.2023வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் முதல் மூன்று நாட்கள் அரசுப் வாரம் பணியாளர்களுக்கு தமிழில் வரைவுகள் குறிப்புகள் எழுதுதல், ஆட்சிமொழி மின்காட்சியுரை பயிற்சி வகுப்பு, கணினித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் தமிழில் ஒருங்குறி பயன்பாடு குறித்து பயிற்சி வகுப்பு நடத்தப்பெற்றது. 


நான்காம் நாள் நிகழ்வாக கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சிமொழிப் பட்டிமன்றம் நடைபெற்றது. ஐந்தாம் நாள் நிகழ்வாக ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. ஆறாம் நாள் நிகழ்வாக வணிகர் சங்க நிர்வாகிகளுடன் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.


இன்றைய தினம் 30.03.2023 செங்ல்பட்டு மாவட்டத்தில் நிறைவு நாள் நிகழ்வாக ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது சிலம்பாட்ட மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல்நாத்,இ.ஆ.ப. அவர்களால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பெற்றது. இப்பேரணியில் தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், செங்கல்பட்டு, இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரியிலிருந்து மொத்தம் 350ற்கும் மேற்பட்ட மாணவ / மாணவிகள் கலந்து கொண்டனர்.


இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கப்பெற்று இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் முடிவுற்றது. கலைக்குழு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும்,தமிழறிஞர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பெற்றன. இந்நிகழ்வினை செங்கல்பட்டு மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்(மு.கூ.பொ) திருமதி பொ.பாரதி அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/