செங்கல்பட்டு மாவட்ட காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் பயிற்சி கூட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.எஸ்.தண்டபாணி (வ.ஊ), திரு.எம்.வெங்கட்ராகவன் (கி.ஊ) மற்றும் மருத்துவர்கள் முன்னிலை வகித்தனர். மருத்துவ முகாமில் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளில் இருந்தும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் கலந்து கொண்ட அனைத்து பணியாளர்களுக்கும் சீருடைகள் வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர விருப்பமுடியவர்கள் விண்ணப்பித்து தங்களை இணைத்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக