இந்த கூட்டத்திற்கு நகர அவைத் தலைவர் அஞ்சுதாஸ் தலைமை தாங்கினார் நகர மன்ற துணைத் தலைவர் லோகநாதன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநில திமுக பொறியாளர் அணி துணை செயலாளரும் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான முனைவர் பிரதீப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதசூதனன் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம் கே டி கார்த்திக் உள்ளிட்ட திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம் கே டி கார்த்திக் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியானது முதல் நிலை நகராட்சியாக சட்டப்பேரவையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக திமுக நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக