பிளஸ் டூ மாணவி குழந்தை திருமணத்திற்கு தாயார் கட்டாய படுத்தியதால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 ஏப்ரல், 2023

பிளஸ் டூ மாணவி குழந்தை திருமணத்திற்கு தாயார் கட்டாய படுத்தியதால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பெரும் புலிப்பாக்கத்தை சேர்ந்த மாணவி 3 ஆண்டுகளாக தாயார் தன்னை குழந்தை திருமணம் செய்து கொள்ள  கட்டாயப்படுத்தி வருவதாக, பிளஸ் 2 மாணவி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். 


இதையடுத்து உடனே நடவடிக்கை எடுத்த கலெக்டர், மாணவியை காப்பகத்தில் சேர்க்கவும் அங்கிருந்து பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவும் உத்தரவிட்டார். சிறுமியின் தாயாருக்கு உரிய ஆலோசனை வழங்கவும் கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.



பெண்கள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்பதே அரசின் இலக்காக உள்ளது. அதற்காக அரசு பள்ளி மாணவிகள், கல்லூரியில் சேர்ந்து படித்தால், மாதம் 1000ரூபாய்   திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெண்களை பிளஸ் 2 அல்லது 10ம் வகுப்பிற்கு பின் கல்வி கற்க அனுப்பாமல் இருப்பதும், சிறுவயதிலேயே கல்யாணம் செய்து வைக்க விரும்புவதும் தொடரத்தான் செய்கிறது.சிறுவயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், வெளி உலகத்தை புரிந்து கொள்வதற்குள், குழந்தைகள், பொறுப்புகள் என கடுமையான நிர்பந்ததத்தை எதிர்கொள்கிறார்கள். 



பல பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் இருண்டு போகிறது. அத்துடன் சிறு வயதிலேயே திருமணம் செய்வதால் கர்ப்பம் தரிப்பதால் இளம் வயதில் மரணங்களும் ஏற்படுகின்றன. அதனால் தான் அரசு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் திருமணத்தை தடுக்க கடுமையான சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.


இந்நிலையில் பிளஸ் 2 படிக்கும் மாணவியிடம் அவரது தாயார் மூன்று ஆண்டுகளாக திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை ஒருகட்டம் வரை பொறுத்துக்கொண்ட மாணவி, கடைசியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கே வந்து கலெக்டரிடமே புகார் அளித்தார், கலெக்டர் வளர்மதியிடம் அந்த பெண் அளித்த புகார் மனுவில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பெரும் புலிபாக்கத்தைச் சேர்ந்த மாணவி நான் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறேன்.


ஆனால் நான் படிக்க விரும்புகிறேன். திருமணத்திற்கு, பல முறை மறுப்பு தெரிவித்துவிட்டேன். ஆனால் என் தாயார் கேட்பதாக இல்லை. இனி என் வீட்டுக்கே நான் செல்ல விரும்ப வில்லை. எனது தாயாரிடம் இருந்து உரிய பாதுகாப்பு தாருங்கள் என்று மனுவில் பிளஸ் 2 மாணவி தெரிவித்திருந்தார். மனுவை உடனே விசாரித்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி மாணவியை காப்பகத்தில் சேர்க்குமாறு சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



- வாலஜா தாலுகா செய்தியாளர் நிஹால் அஹமத். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/