செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் பஞ்சாயத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 ஏப்ரல், 2023

செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் பஞ்சாயத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக உலக மகளிர் தின விழா ஊராட்சி மன்ற தலைவர் என்.சி. பாஸ்கர் (எ) பார்த்தசாரதி தலைமையில் திருப்போரூர்  வடக்கு ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர் டி. தாட்சாயிணி தனசேகரன் அவர்கள் ஏற்பாட்டில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சில் சிறப்பு அழைப்பாளர்களாக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழுபெருந்தலைவர் தலைவர் எஸ்.ஆர்.எல். இதயவர்மன் மற்றும் என்.வெண்ணிலா ஒன்றிய கவுன்சிலர் நெல்லிக்குப்பம், எஸ். செல்வி சீனிவாசன் துணைத் தலைவர் நெல்லிக்குப்பம் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு மகளிர் குழுக்களை சார்ந்த 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்  நடைபெற்றது விளையாட்டுப் போட்டியில் பெண்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்  வெற்றி பெற்றவர்களுக்கு  கோப்பைகள் வழங்கப்பட்டதுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் நெல்லிக்குப்பம் பஞ்சாயத்து பொதுமக்கள்  அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் இந்நிகழ்ச்சியை கண்டுகளித்தனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad