இளைஞர்களின் கோரிக்கை ஏற்று டிவி மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 ஏப்ரல், 2023

இளைஞர்களின் கோரிக்கை ஏற்று டிவி மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட மாதா கோவில் தெரு இளைஞர்கள் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் போட்டியை ஒன்றாக சேர்ந்து கண்டுகளிக்க அங்குள்ள டிவி ரூமுக்கு  தொலைக்காட்சி பெட்டியையும், கேரம் போர்டும் வேண்டுமென ஊராட்சி மன்ற  தலைவருக்கு  கோரிக்கை வைத்தனர். 

அதனைத் தொடர்ந்து கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராணி எல்லப்பன் புதிய எல்இடி வண்ண தொலைக்காட்சி பெட்டியும், கேரம் போர்டும் இன்று திருப்போருர் சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு எக்ஸ்பிரஸ் எல்லப்பன், 4வது வார்டு உறுப்பினர் திருமதி வானதி சுகு முன்னிலையில் இன்று இளைஞர்களுக்கு வழங்கினார்கள்.



உடன் திமுக கிளைச் செயலாளர் ஏ.பி.ஆர் அசுந்தன், மோசஸ், தட்சிணாமூர்த்தி, வழக்கறிஞர் விஜி, வழக்கறிஞர் பரத்,  முத்து, மனோ, பாண்டி, லூர்துநாதன், ராஜா,  பழனி, ராஜேஷ், சுரேஷ்,  லெனின், ரெயின்ஷா, எடிசன், பெர்னாண்டோ, ரீகன், அப்துல் சுக்கூர், நாதன், அபித், ஜான், முருகேசன், பாலசுப்பிரமணி மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad