அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் 275 மனுக்களுக்கு தீர்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 ஏப்ரல், 2023

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் 275 மனுக்களுக்கு தீர்வு.


அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி,தலைமையில் இன்று (10.04.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 275  மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.


மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து துறைகளின் சார்பில் சம்மந்தப்பட்ட துறைகளின் மாவட்ட நிலை அலுவலர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ளவேண்டும். இக்கூட்டத்தில் மாவட்ட நிலை அலுவலர்கள் கலந்து கொள்ள இயலாத பட்சத்தில் மாவட்ட நிலை அலுவலர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள அலுவலர்கள் கலந்து கொள்வதுடன் இவ்வாறு கலந்து கொள்ளும் அலுவலர்களின் விவரங்களை முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து அனுமதி பெறுவதுடன் மேற்கண்ட அலுவலர்களுக்கு ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற தங்களது துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள் விவரம் குறித்தும், மனுக்கள் தீர்வு, மனுக்கள் நிலுவை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தவறாமல் தெரிந்திருக்க வேண்டும்  எனவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  ரமண சரஸ்வதி,  அறிவுறுத்தினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/