சாலை விரிவாக்க பணிகள் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

சாலை விரிவாக்க பணிகள் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு.


அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், விளந்தை வடக்கு கிராமம், கிரின்லேண்ட் பள்ளி மைதானம் அருகில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் - மதனத்தூர் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக 8 கி.மீ தூரத்திற்கு அகலப்படுத்தி உறுதிபடுத்துதல் பணி துவக்க விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ கண்ணன் முன்னிலை வகித்தார். சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையிடத்தை இணைக்கும் வகையில் சுமார் 2500 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளை பகுதிவாரியாக இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக தரம் உயர்த்துதலில், நடப்பு நிதி ஆண்டில் (2022-2023) சுமார் 150 கி.மீ நீளம் உள்ள சாலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


அந்த வகையில்  அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், விளந்தை வடக்கு கிராமம், கிரின்லேண்ட் பள்ளி மைதானம் அருகில் அரியலூர் நெடுஞ்சாலைக் கோட்டத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி மதிப்பீட்டில் விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் - மதனத்தூர் சாலையில்  இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணியினை  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.


இச்சாலை மேம்பாடு செய்யும் வழித்தடத்தில் உள்ள பெரியாத்துக்குறிச்சி, கருக்கை, ராங்கியம் மற்றும் சிலுவைச்சேரி, ஆகிய பகுதிகள் வழியாக சாலை செல்கிறது. இச்சாலையில் 10 கால்வாய்கள் அகலப்படுத்துதல், 1 சிறுபாலம் அகலப்படுத்துதல் மற்றும் 1 சிறுபாலம் திரும்பக்கட்டுதல் பணிகளும் கட்டப்பட உள்ளதுடன் சாலையின் இரு மருங்கிலும் 6000 மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வழித்தடமாகவும் அமையப்பெறவுள்ளது.


எனவே, இச்சாலை பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களுக்கு தற்போது உள்ளது போல் பசுமையான மரங்களுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு  போக்குவரத்துத் துறை அமைச்சர்.சிவசங்கர்  அறிவுறுத்தினார்.


இந்நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம்,  உதவி கோட்டப் பொறியாளர்கள் கருணாநிதி, சிட்டிபாபு, ராஜா, உதவி பொறியாளர்கள் விக்னேஷ், இளைய பிரபுராஜன், முரளிதரன், வட்டாட்சியர் இளவரசன் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மற்றும் அணிக்குதிச்சான் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறை - நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு சார்பில் பூவானிப்பட்டு முதல் கீழநெடுவாய் சாலை தரம் உயர்த்துதல் பணியினை  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்  அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.


மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி,  ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், திருச்சி நபார்டு கோட்டப் பொறியாளர் வடிவேல், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், அரியலூர் உதவிக் கோட்டப் பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் ராஜா, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/