செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி - குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில், குரோம்பேட்டை பகுதி அதிமுக செயலாளர் குரோம்பேட் சதீஷ் மற்றும் நியுகாலனி அனந்தராமன் ஆகியோரின் ஏற்பாட்டில், அதிமுக மகளிரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திருமதி. பா.வளர்மதி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் முன்னிலையில் தண்ணீர் பந்தலினை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்ப்பூசணி, பழச்சாறு மற்றும் குளிர்பானங்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் திருநீ்ர்மலை சுபாஷ்சந்திரபோஸ், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பல்லாவரம் பா.இராஜப்பா, பல்லாவரம் முன்னாள் நகர கழக செயலாளர் சேவல் சேகர், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் டாக்டர் மோசஸ் ஜோஷ்வா மற்றும் அதிமுகவினர் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக