செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பெருமாட்டுநல்லூர் முதல் நிலை ஊராட்சியில் பாண்டூர் கிராமத்தில் சுமார் 1.30 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தினை திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு நந்திவரம் குடுவாஞ்சேரி நகராட்சிக்கு நில உரிமை மாற்றம் செய்யக்கோரி வருவாய் ஆய்வாளர் அவர்கள் 29-03-2023 அன்று மனு செய்துள்ளார்.
எனவே இந்த மனுவுக்கு கிராம பொது மக்கள் அனைவரும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். ஊராட்சியில் 3000 திற்கும் மேற்பட்ட குடும்பங்களும் 12000திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக இந்த பகுதி நிலத்தை கொடுத்தால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து பொதுமக்களும் பாதிப்படைவார்கள். அது மட்டுமல்லாது மூச்சுத் திணறல், சுகாதார சீர்கேடு, மற்றும் கொரோனா போன்ற கொடிய நோய்கள் பரவி வரும் இந்த நிலையில் கொசு தொல்லையால் கொடிய நோயால் பொதுமக்கள் பாதிப்படையவும் வாய்ப்பு உள்ளது.

பாண்டூர் பகுதியில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர். மேலும் ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் நிலமாகவும் இந்தப் பகுதி பயன்பட்டு வருகிறது இந்தப் பகுதியில் இருந்து 10 மீட்டர் தொலைவில் அஸ்தினாபுரம் ஏரியும் 20 மீட்டர் தொலைவில் , குழந்தைகள் காப்பகம் மற்றும் அனைத்து மதத்திற்கான கோவில் தேவாலயம், மசூதியும் அமைந்துள்ளது. எனவே திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு நில உரிமை மாற்றம் செய்யக்கூடாது என ஊர் பொதுமக்கள் அனைவரும் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக