மதுபோதை ஆசாமிகளின் கூடாரமாக மாறிவரும் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

மதுபோதை ஆசாமிகளின் கூடாரமாக மாறிவரும் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் !


மதுபோதை ஆசாமிகளின் கூடாரமாக மாறிவரும் கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில், சுமார் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டோர் வந்து போகும் பெரிய பஸ் நிலையம் ஆகும்.24மணி நேரமும் மதுபோதை ஆசாமிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. கோடை காலம் என்பதால் கூடுவாஞ்சேரி பஸ் நிலைய வளாகத்தில் உட்கார முடியாத அவள நிலை கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் இரவு நேரங்களில் விலக்குகள் இல்லாததை பயன்படுத்தி மதுபோதை ஆசாமிகளின் அட்டகாசம் எல்லை மீறுவதாகவும், அதேபோன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் இருளை பயன்படுத்தி சில்மிஷத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு மேற்கண்ட தவறுகள் நடக்காதவாறும், உடனடியாக மின்விளக்கு அமைத்துதர மாவட்ட நிர்வாத்திடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad