கரூர் மாவட்ட கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 ஏப்ரல், 2023

கரூர் மாவட்ட கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தார்.


பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின்  வழிகாட்டுதலின்படி, கரூர் மாவட்ட கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று (06.04.2023) நடைபெற்றது.

இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் அவர்கள்  தலைமையேற்று இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். 


இந்த நிகழ்வில் கரூர் மாவட்ட மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் கரூர் அரசு கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான முனைவர் லக்ஷ்மணசிங், கிருஷ்ணா கல்லூரியின் முதல்வர் முனைவர்  நல்லதம்பி, கரூர் மாவட்ட ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் அறிவழகன், பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி மாவட்ட பட்டதாரிகளுக்கான பேரவை உறுப்பினர் முனைவர் ராதிகா மற்றும்  கிருஷ்ணா கல்லூரி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். 


இந்த மாபெரும் இரத்ததான முகாமில் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 50  மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இரத்ததானம் செய்தனர். இந்த நிகழ்வை கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல்  கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வேளாங்கண்ணி அவர்கள் ஏற்பாடு செய்து திறம்பட ஒருங்கிணைத்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/