ஊனமாஞ்சேரி- நெடுங்குன்றம் ஊராட்சி பணிகளை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு.! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

ஊனமாஞ்சேரி- நெடுங்குன்றம் ஊராட்சி பணிகளை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு.!


செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஊனமாஞ்சேரி ஊராட்சி கொளப்பாக்கத்தில் தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகாத்மா காந்தி மகளிர் சுய உதவிக் குழுவினரால் நடத்தப்படும் கேட்டரிங் சர்வீஸில் காவல் அலுவலர்களுக்கு உணவு வழங்குவதற்கான சமையல் அறை மற்றும் பிரதமமந்திரி குடியிருப்ப திட்டத்தின் கீழ் 186 வீடுகள் கட்டும் ஆகிய பணிகளை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அரசு செயலாளர் சைலேஷ்குமார் சிங் தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அவருடன் ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் மரு.டரேஸ் அஹமது, மகளிர் திட்ட மேலாண்மை இயக்குநர் திவ்யதர்ஷினி, மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல் நாத், போலிஸ் அகாடமி கூடுதல் காவல் துறை இயக்குநர் சி.ஈஸ்வரமூர்த்தி, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் (வீடுகள்) ராஜஸ்ரீ, மகளிர் திட்ட அலுவலர் செல்வராணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இந்துபாலா, ஒன்றிய குழுத் தலைவர் உதயா கருணாகரன், துனை தலைவர் வி.எஸ்.ஆராமுதன், ஊனமாஞ்சேரி தலைவர் எம்.ஜி.மகேந்திரன், நெடுங்குன்றம் தலைவர் வனிதா ஸ்ரீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், தண்டபாணி, துனை தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/