ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி விநாயகா மிஷன் ஸ்கூல் ஆஃப் ‌அலைடு ஹெல்த் சயின்ஸின் அவசர சிகிச்சை மருத்துவ தினம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 மே, 2023

ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி விநாயகா மிஷன் ஸ்கூல் ஆஃப் ‌அலைடு ஹெல்த் சயின்ஸின் அவசர சிகிச்சை மருத்துவ தினம்.


புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஸ்கூல் ஆஃப் ‌அலைடு ஹெல்த் சயின்ஸின் அவசர சிகிச்சை தொழில்நுட்பவியல் துறை சார்பில் அவசர சிகிச்சை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.இத்தினத்தை கொண்டாடும் விதமாக மருத்துவ பயிலரங்கு நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் டீன் பேராசிரியர் டாக்டர் ப. செந்தில் குமார்   வழிக்காட்டுதலின் படி இயக்குநர் பொறுப்பு ஆண்ட்ரு ஜான் தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியின்‌‌ உதவி பேராசிரியர்  டாக்டர்‌.சுரேநதிர்‌ கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு அவசர சிகிச்சை ஏன் , எதற்காக என்று மாணவர்களுக்கு ‌எடுத்துரைத்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின்   டாக்டர் எழில்குகன்‌ கலந்து கொண்டு உரையாற்றினார்.


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் டாக்டர்.அனுஷா கலந்து கொண்டு பேசினார், புதுச்சேரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனை டாக்டர் பாலாஜி ஷா கலந்து கொண்டு இன்றைய காலகட்டத்தில் அவசர சிகிச்சை பிரிவு தொழில்நுட்பவியலாளர்களின் பங்களிப்பு பற்றி எடுத்துரைத்தார். புதுவை  ஸ்ரீ லக்ஷ்மி நாராயண மருத்துவ கல்லூரியின் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் டாக்டர்.திருமூர்த்தி பங்குகொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் எம்.ஜெயசூரியா நன்றி‌‌ கூறினார். இந்நிகழ்ச்சியில்  150க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் பங்குபெற்று பயனைடந்தனர்.


இந்நிகழ்ச்சிக்கான‌ ஏற்பாடுகளை  நிர்வாக அதிகாரி சந்துரு, அவசர சிகிச்சை துறையின் விரிவுரையாளர் ஜெயசூரியா  மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad