புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தாமதம் ஏற்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி ஸ்மார்ட் சிட்டி அதிகாரி மணிகண்டனிடம் குற்றச்சாட்டு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 ஜூலை, 2023

புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தாமதம் ஏற்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி ஸ்மார்ட் சிட்டி அதிகாரி மணிகண்டனிடம் குற்றச்சாட்டு.


புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதியில்  ஸ்மார்ட் சிட்டி சிறப்பு ஆலோசனை கூட்டம் பழைய நீதிமன்ற வளாகம் கடற்கரை சாலை அருகில் நடைபெற்றது, அதில் அதிகாரிகள் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட திட்டங்களின் நிலைப்பாடு குறித்து சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் காணொளி உதவியுடன் விவாதிக்கப்பட்டது. 

அப்போது சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது, தொகுதி முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் முழுமையாக கொண்டுவரப்படாமல் இருப்பதும், முழுமையாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என்பதும் வருத்தத்திற்குரியது. உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட ஆட்டுப்பட்டி அடுக்குமாடி குடியிருப்பு சம்பந்தமாக முன்பே கோப்புகள் அனுப்பப்பட்டு இருந்தது அதன் நிலைப்பாடு குறித்து அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் கஷ்டமான சூழலில் இயற்கையை எதிர்த்து போராடி வருகின்றனர். அங்கு வசிக்கும் அனைவருக்கும் அரசால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தருவது தான் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க வழிவகைக்கும். ஆனால் தற்போது திட்டம் ரத்து செய்யப்பட்டது என்று தெரிவிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வெளிநடப்பு  செய்தார். 


உடனே அங்கு இருந்த அதிகாரிகள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினரை சமாதானம் செய்து அமர வைத்து தொடர்ச்சியாக கூட்டத்தை நடத்தினர். மேலும் நேதாஜி நகர் துறைமுகம் இணைப்பு சாலை பின்புறம் மீன் அங்காடி அமைப்பது சம்பந்தமாக மக்கள் பயன்பாட்டிற்காக நாம் முயற்சி எடுத்தும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பலவிதமான இடையூறு உள்ளதாக பலதரப்பட்ட மக்கள் என்னை வந்து சந்தித்து பேசினார்கள். ஆகவே துறைமுகம் இணைப்பு சாலை கூடுதலாக 15 அடி அகலப்படுத்தி பின்னர் அங்குள்ள மக்களை கலந்தாய்வு செய்து திட்டங்கள் கொண்டு வர வேண்டும் மக்களுக்கு பிடிக்காத எந்ததிட்டத்திலும் எனக்கும் உடன்பாடு இல்லை! அதாவது வேடிக்கை என்னவென்றால் மக்கள் வேண்டும் என்று கேட்கும் ஆட்டுப்பட்டி அடுக்குமாடி குடியிருப்பு "அரசால் கொண்டுவர முடியவில்லை" மக்கள் வேண்டாம் என்று கேட்கும் மீன் அங்காடி கொண்டுவர அதிக நாட்டம் காட்டுகிறீர்கள் வேடிக்கையாகவும், வருத்தமாகவும் உள்ளது. மக்கள் தேவைப்புரிந்து மக்கள் குரலாகவே பணிபுரிய நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனேன் ஆனால்! அதிகாரிகள் செய்யும் தவறினால் தினமும் எனக்கு மன அழுத்தமும் வேதனையும் ஏற்படுகிறது. 


பிரான்சுவா தோப்பில் நவீன கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது அப்பணின் நிலைப்பாடு என்ன ஆயிற்று? திப்புராயப்பேட்டையில் நவீன முறையில் மின் தகன மையம் அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது அப்பணி என்ன ஆயிற்று? ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திப்புராயபேட்டையில் கட்டி வரும் அடுக்குமாடி  குடியிருப்பின் பணிகள் எப்பொழுது நிறைவு பெறும்? உப்பனாறு பணிகள் எப்பொழுது நிறைவு பெறும்? திப்புராயப்பேட்டையில் கழிவுநீரை சுத்தகரிப்பு செய்யும் நிலையம் அமைக்கும் பணி என்ன ஆயிற்று? பழைய துறைமுகத்தில் மகத்தான புதுச்சேரிக்கு பேர் சேர்க்கும் வகையில் ஆடிட்டோரியத்திற்கான பூமி பூஜை போடப்பட்டது அப்பணியின் வேகம் என்ன ஆயிற்று?  என்று அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


ஸ்மார்ட் சிட்டி அதிகாரி மணிகண்டன்   ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணி புரியும் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளை சட்டமன்ற உறுப்பினர் கேட்பது யாவும் மக்கள் நன்மைக்கே, ஓட்டு போட்ட மக்களுக்கு பதில் அளிக்கவும் அவர்களுக்கு உழைக்க வேண்டியது அவர் கடமை அவரின் மனக்குமுறல் நியாயமானது அவர் சுட்டிக்காட்டிய பணிகள் யாவற்றையும் ஆறு மாதத்திற்குள் முடித்து விடுங்கள் என்று அதிகாரி வலியுறுத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்ட  முடிவில் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி  அதிகாரிகளுக்கு நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/