புதுச்சேரி மாநிலம் முதல்வர் தொடங்கி வைத்த டென்னிஸ் விளையாட்டு போட்டி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 ஜூலை, 2023

புதுச்சேரி மாநிலம் முதல்வர் தொடங்கி வைத்த டென்னிஸ் விளையாட்டு போட்டி.


புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் 7.89 லட்சம் செலவில் புதுச்சேரி பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் புதுச்சேரி முதலமைச்சர்  தலைமையில் உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி  முன்னிலையில் இரவில் பெரியவர்கள் மாணவர்கள் விளையாடுவதற்காக மின் விளக்குகள் பொருத்தப்பட்டு விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டது.


புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் , கோரிமேடு போலீஸ் மைதானம், கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப்பள்ளி, அப்பா பைத்தியசாமி கோயில் என்.ஆர். கோர்ட் வளாகம், ஐ.ஏ.எஸ் குடியிருப்பு ஆகிய இடங்களில் காலை மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், பெரியவர்கள், தன்னார்வமாக டென்னிஸ் விளையாடி வருகின்றனர். இவர்கள் ஒருங்கிணைந்தே என் ஆர் ஓபன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டிக்கு ஏற்பாடு செய்தனர். முதல் கட்டமாக பள்ளி மாணவர்களுக்கு டென்னிஸ் போட்டி கடந்த மாதம் நடைபெற்றது, இரண்டாம் கட்டமாக பெரியவர்களுக்கான டென்னிஸ் போட்டி என்.ஆர் கோர்ட் வளாகத்தில் நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் விளையாட்டுப் போட்டிகள் புதுச்சேரி முதலமைச்சர்  .என். ரங்கசாமி தலைமையில் உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி முன்னிலையில் நடைபெற்றது. 


விளையாட்டு இரவு பகல் பாராமல் நான்கு டென்னிஸ் மைதானம் அமைத்து நடைபெற்று வருகிறது இப்பணிக்காக சுமார் 7.89 லட்சம் புதுச்சேரி மாநிலஸஅரசால் செலவிடப்பட்டுள்ளது . இப்பணி  முதலமைச்சர் என்.ரங்கசாமி  தலைமை தாங்கி உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள்  முன்னிலையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு விளையாட்டுகள்  தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்  முதலமைச்சரிடம் இதைப் போன்று உள்விளையாட்டு அரங்கம், ஹாக்கி மைதானம் போன்றவற்றினை செலவு செய்து அனைவரும் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பான முறையிலும் விளையாடி பயிற்சி பெற உதவி புரியுமாறு திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  அனிபால் கென்னடி  கேட்டுக்கொண்டார், இக்கோரிக்கையை  முதலமைச்சர்  ஏற்று செய்து தருவதாக உறுதி அளித்தார். 


மேலும் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் சரியான கழிவறை இல்லை, பாதுகாப்பு மதில் சுவர் உடைந்து நிலையில் கிடந்தது இவை யாவற்றையும் என் கோரிக்கை ஏற்று துரித முயற்சி எடுத்து தற்போது இவை யாவும் சீரமைத்து உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/