புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அரசு குடியிருப்பில் சீர் செய்து புதுப்பித்தல் பணியை திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பூமி பூஜை போட்டு தலைமை ஏற்று தனது துணைவியார் அனிபால் ஜெசிந்தாவுடன் இணைந்து தொடங்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 ஜூலை, 2023

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அரசு குடியிருப்பில் சீர் செய்து புதுப்பித்தல் பணியை திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பூமி பூஜை போட்டு தலைமை ஏற்று தனது துணைவியார் அனிபால் ஜெசிந்தாவுடன் இணைந்து தொடங்கி வைத்தார்.


உப்பளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதலியார் பேட்டை உழந்தை அரசு குடியிருப்பில் பல வருடமாக பல பிரச்சினைகளையும் அடிப்படைத் தேவைகளையும் பொதுமக்கள் வைத்து வருகின்றனர், திரு.அனிபால் கென்னடி எம் எல் ஏ அவர்களிடம் இது சம்பந்தமாக அவர் வெற்றி பெற்ற பிறகு கோரிக்கை மனுவாக அளித்தனர். அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்து 50 க்கு மேற்பட்ட மோட்டார்களை மாற்றியுள்ளார், மின் கசிவினால் மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதினால் மின் இணைப்புகளை புதுப்பித்துள்ளார்.

அத்துடன் மழை புயலில் சேதமடைந்த மின்விளக்குகளையும் நவீன முறையில் புதுப்பித்து இருக்கிறார், அங்குள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்படி அதிகாரிகளை தொடர்ச்சியாக அறிவுறுத்தி மக்கள் திருப்தி அடையும் வகையில் அவர்களுக்கு எலக்சன் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை உடனுக்குடன் செய்துள்ளார் . அதன் தொடர்ச்சியாக இன்று நிகழும் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட முதலியார்பேட்டை உழந்தை குடியிருப்பில் உள்ள Type-ll (மற்றும்) Type-III கழிவறையில் உள்ள பழதடைந்த கதவு மற்றம்  வெண்டிலேட்டரை புதியதாக மாற்றும் பணியின் வேலைக்கு ரூபாய் 14.99 இலட்சம் மதிப்பீட்டில் பூமிபூஜை விழா உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. V.அனிபால் கென்னடி அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது.


இவ்விழாவில் பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் (மத்திய) கோட்டம் செயற்பொறியாளர் திரு.த.உமாபதி அவர்கள், உதவிப்பொறியாளர் செ.பார்த்தசாரதி அவர்கள், இளநிலைப் பொறியாளர் திரு. ஏ.முருகன் அவர்கள் கலந்துpகொண்டனர். இவ்விழாவில் முக்கிய பிரமுகர்களும் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு பூமி பூஜையினை சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து டைப்-3ல் பணி இதேபோன்று நடக்க உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உறுதியளித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/