குடிநீர் தொட்டிகளை சுத்தகரிப்பு செய்வதற்கான பணிகளை தொடங்கி வைத்த உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 ஜூலை, 2023

குடிநீர் தொட்டிகளை சுத்தகரிப்பு செய்வதற்கான பணிகளை தொடங்கி வைத்த உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.


புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட உடையார் தோட்டம் பகுதியில் உள்ள அப்துல் கலாம் அரசு குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தகரிப்பு செய்வதற்கான பணிகள் இன்று திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தலமையில் தொடங்கப்பட்டது. இப்பணி முழுக்க முழுக்க சுகாதாரமான முறையில் செய்யப்படும் என்று பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பார்த்தசாரதி  சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பணிகளை செய்தபடியே விளக்கம் அளித்தார். 

முதலில் மோட்டார் உதவியுடன் தொட்டியில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டது அதன் பின்னர் வாக்கியூம் கிளீனர் வைத்து மீதமுள்ள தேங்கிய நீர் சுத்தம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து சுவற்றில் உள்பகுதியில் உள்ள படிந்த பாசிகள் கருவிகள் மூலம் அகற்றப்பட்டது அதற்கு பின்னர் கிருமிகளை அழிக்கும் சிறந்த அம்சங்கள் கொண்ட கிருமி நாசினி தெளித்து அதன் தொடர்ச்சியாக பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை செயலிழக்க செய்ய UV கதிர்வீச்சு போடப்பட்டது, இம்முறையிலேயே சுமார் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படும் என்று உதவி பொறியாளர் விளக்கியதின் பேரில் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களிடம் செயல் மூலமாக காண்பித்து விளக்கினார். 


உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, மீனவரணி விநாயகம், கிளை செயலாளர்கள் சக்திவேல், செல்வம், ராகேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/