நெய்வேலியில் இருந்து வரும் ஹெச்.டி லைனை அகற்ற கோரிக்கை மனு அளித்த உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ .அனிபால் கென்னடி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 ஜூலை, 2023

நெய்வேலியில் இருந்து வரும் ஹெச்.டி லைனை அகற்ற கோரிக்கை மனு அளித்த உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ .அனிபால் கென்னடி.


புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்குட்பட்ட தமிழ்தாய்  நகரில் அமைந்துள்ள பொறையாத்தம்மன் கோவில் எதிரில் உள்ள புறாக்குளம் மைதானத்தில் அங்குள்ள படிக்கும் இளைஞர்கள் விளைாயடி வருகின்றனர். மேலும், வயதானோர் அன்றாடம் குளத்தின் அழகை ரசித்து வருகிறார்கள் ஆனால், அங்கு போதிய வெளிச்சம் இல்லாததால் சமூக விரோதிகள் அந்த புனிதமான குளத்தை அசிங்கம்படுத்தும் விதத்தில் குடிக்கின்றனர். 

ஆகையனால் இரண்டுக்கும் மேற்பட்ட விளக்குகள் அமைத்து அந்த இடத்தை வெளிச்சமாக வைத்துக்கொள்ள உதவிடும்படி திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  செயற்பொறியாளரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். மேலும், அத்துடன் நேத்தாஜி நகர்-2 பின்புறம் நெய்வேலியில் இருந்து வரும் HT Line செல்கிறது அது தற்சமயம் செயல்பாட்டில் இல்லை. ஆகையினால் அதை அகற்றி கொடுக்கும்படியும் அத்துடன் உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேத்தாஜி நகர்-2, அழகர்சாமி வீதி, ரங்கநாத வீதி, இணைப்பில் உள்ள மின் கம்பத்தில் ஒரு மாதக்காலமாக மின் விளக்கு எரியவில்லை. நேதாஜி நகர்-II-ல் பொது மக்கள் அதிகம் பயணம் மெற்கொள்கின்றனர். 


இளஞர்கள் அங்குள்ள மைதானதில் விளையாடி வருகின்றனர். அருகாமையில் மரச்செடிக்கொடிகள் நிறைந்து பூச்சு பொட்டு பாம்புகளின் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. மேலும், அங்கு கும்இருட்டாக இருப்பதினால் சமூகவிரோத செயல்கள் செய்ய ஏதுவாக இந்த இடங்கள் இருக்கிறது. ஆகவே அங்குள்ள மின்கம்பத்தில் இருப்புறம் விளக்குகள் அமைத்து பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் உதவிடும்படி அனிபால் கென்னடி உப்பளம் தொகுதி திமுக எம்எல்ஏ அவர்கள் செயற்பொறியாளருக்கு  மனு கொடுத்து  கேட்டுக்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர் கண்ணன், கழக கிளைச் செயலாளர்கள் செல்வம், காலப்பன், ராகேஷ், கழக சகோதரர்கள் பத்தாவட்சலம், பாலாஜி, ரகுராமன் ஆகியோர் உடன் இருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/