புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட பெரியபள்ளி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நகராட்சி மேற்கொள்ளும் பணிகளை திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி எம்எல்ஏ அதிகாரியுடன் நேரில் சென்று ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 ஜூலை, 2023

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட பெரியபள்ளி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நகராட்சி மேற்கொள்ளும் பணிகளை திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி எம்எல்ஏ அதிகாரியுடன் நேரில் சென்று ஆய்வு.


புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட பெரியபள்ளி பகுதிகளில் யூ மற்றும் ப-வடிவ வாய்க்கால் மேம்படுத்தும் பணி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2.25 கோடி மதிப்பீட்டில் நகராட்சி மூலம் பணிகளை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி  பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.  திடிரென்று பணிகள் நடைபெறாமல் இருந்தஞ  . இதை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி உடனே நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம், காண்ட்ராக்டர் பிராங்க்ளன் ஆகியோரை சந்தித்து பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

மேலும் நகராட்சி அதிகாரிகளை வரவழைத்து அவர்களுடனும் இணைந்து அப்பணிகளை நேரில் சென்று சட்டமன்ற உறுப்பினர்  ஆய்வுகள் மேற்கொண்டார். ஆய்வின் பொழுது சில மரங்கள் சாய்ந்து கொண்டு பொதுமக்களுக்கு தொந்தரவாக உள்ளதாக அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர் அதனை அதிகாரிகளிடம் நேரில் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் காண்பித்து சாய்ந்த மரத்தையும், வேர்களை அகற்றி கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். 


வரும் ஞாயிற்றுக்கிழமை சாய்ந்த மரங்களை அகற்றி கொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர் மேலும் பணிகளில் எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ச்சியாக வேகமாக நடக்கும் என்று அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர் உறுதி அளித்தனர். உடன் அவைத் தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, மாநில மீனவரணி விநாயகமூர்த்தி, மாநில மாணவரணி நிசார், கிளை செயலாளர்கள்   மற்றும் பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/