திருமங்கலம் அருகே கார் - கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு பேர் பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 ஜூலை, 2023

திருமங்கலம் அருகே கார் - கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு பேர் பலி.

திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மையிட்டான் பட்டி வழக்கு அருகே மதுரையிலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற கண்டெய்னர்  லாரி மீது அதிகாலையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் சாலையின் தடுப்பை தாண்டி பறந்து சென்று கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் கண்டெய்னர் டிரைவர் மதுரை விரகனூர் அருகே நெடுங்குளத்தைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் காரில் வந்த  குமரி மாவட்டம் மேக்காடு தெங்கன்குளி விளை ஒரே குடும்பத்தை சேர்ந்த ஷாம் டேவிட்சன், ஜேம்ஸ் மார்டின், கமலேசன் உட்பட 4 பேர் பலி.


மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த மையிட்டான் பட்டி விளக்கு அருகே மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கி கண்டெய்னர் லாரியை மதுரை விரகனூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் ஓட்டி சென்றுள்ளார். அப்போது கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த குமரி மாவட்டம் மேக்காடு தெங்கன்குழி விலை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாம் டேவிட்சன் ஜேம்ஸ் மார்ட்டின் கமலேசன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர் விளக்கு அருகே வந்த போது திடீரென நிலை தடுமாறி சென்டர் மீடியினில் மீது ஏறி தடுப்பில் மோதி பறந்து எதிரே வந்து கொண்டிருந்த கண்டைனர் மீது ஓட்டுனர் அமைந்திருக்கும் பகுதியிலேயே சென்று கார் மோதியதில் கண்டெய்னர் லாரி டிரைவர் செல்வகுமார் உட்பட காதில் வந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad