பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 ஜூலை, 2023

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி இன்று  நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார். 


பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகளை ஏந்தியவாறு மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் இருந்து நான்கு முனை சந்திப்பு வரை சென்ற பேரணி நிறைவடைந்தது. பேரணியில் மாவட்ட வருவாய் வட்டாட்சியர் பிரவீனா குமாரி தாசில்தார் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad