உதகையில் ஓபிஎஸ் தரப்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கொடியை பயன்படுத்த தடை செய்யக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

உதகையில் ஓபிஎஸ் தரப்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கொடியை பயன்படுத்த தடை செய்யக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

உதகையில் ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்த தடை செய்யக் கோரி நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.



இது குறித்து நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பிரபாகரனிடம், அதிமுக மாவட்டச் செயலாளா் கப்பச்சி வினோத் தலைமையில் கட்சி நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:



கொடநாடு வழக்கு தொடா்பாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் உதகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளனா். இதில் அதிமுகவின் சின்னம், கொடிகளை அவா்கள் பயன்படுத்த உள்ளனா்.



ஆனால், இந்திய தோ்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தரப்பை அங்கீரித்துள்ள நிலையில், அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் அதிமுகவின் சின்னம், கொடிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.



முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.ஆா்.அா்ஜுணன், கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன். ஜெயசீலன்,  குன்னூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சாந்தி ராமு, மாவட்ட துணை செயலாளர. கோபாலகிருஷ்ணன், முன்னால் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாலநந்தகுமார், நகர செயலாளர் சண்முகம்  உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/